உலகப் பொருளாதாரம் வரும் 2023-ஆம் ஆண்டு மந்தநிலையை எதிர்நோக்கி செல்லும் என மேற்கத்திய நாடுகள் தங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆசிய கண்டம் பொருளாதாரத்தில் சிறப்பாக உள்ளது என்றார்.
தனியார் தொலைக்காட்சி உடனான நேர்காணலில் பேட்டியளித்த மோர்கன் ஸ்டான்லியின் தலைமை ஆசியப் பொருளாதார நிபுணர் சேத்தன் அஹ்யா, சீனா தற்போது கரோனா வைரஸ் தொற்று பிரச்னைகளை எதிர்த்துப் போராடிய நிலையிலும் அதன் வளர்ச்சியைக் கட்டவிழ்த்துவிட்டதாகவும் இது இந்தியப் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றியும் விரிவாகப் தெரிவித்துள்ளார்.
மோர்கன் ஸ்டான்லியின் பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, சீனாவின் ஏற்றுமதியால் இந்தியா அதிக அளவில் பலன் பெறாது அதே வேளையில், தென் கொரியாவும் தைவானும் அதிகமாக பயனடைவர். இந்தியா அவ்வப்போது சில மறைமுக பலன்களைப் பெறலாம். ஆனால் இந்தியா உடனான சீனாவுக்கான ஏற்றுமதியில் நாம் அதிக நன்மைகளைப் பெற போவதில்லை என்றார். பணவீக்கம் குறையத் தொடங்கியதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா ஆரோக்கியமான வளர்ச்சியைக் காணும் என்று உலகளாவிய நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இதற்கிடையில் முதலீட்டு மேலாண்மை மற்றும் நிதிச் சேவை நிறுவனம் சீனாவின் ஜிடிபி வளர்ச்சியை 2023-ல் 5.4 சதவீதமாக கணித்துள்ளது. அதே வேளையில் 2023-ம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.4 சதவீதமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே அடுத்த ஆண்டு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலாக இருக்கும் என்றார் அஹ்யா.
சீனா மீண்டு வருவதால் கச்சா எண்ணெய் விலையில் சற்று மாற்றம் ஏற்படும். அதே வேளையில் சீனா மீண்டு வரும்போது கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை தனியார் துறை மற்றும் வங்கிகள் வலுவான அடித்தளத்தை உள்ளடக்கியது என்று மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி பிப்ரவரி 2023 வரை வட்டி விகிதங்களை உயர்த்தும் அப்போது ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகக் இடைநிறுத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.