முகப்பு
உலகம்

வியூக ரீதியான கூட்டு நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது: ராகுல் காந்தி பேச்சுக்கு அமெரிக்கா பதில்

நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் குறித்து ராகுல் காந்தி உரை நிகழ்த்திய நிலையில், அமெரிக்காவின் வியூக ரீதியான கூட்டு நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது என அமெரிக்கா பதிலளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
பகிர்:

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது புதன்கிழமை மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக சாடினார். சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பின்பற்றப்பட்ட குறைபாடுள்ள கொள்கையால் இரு வேறு இந்தியா உருவாகியுள்ளதாக அவர் கூறினார்

குறிப்பாக, வெளியுறவுக் கொள்கையை குறித்து பேசிய அவர், "நீங்கள் பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றாக இணைத்துள்ளீர்கள். இது இந்திய மக்களுக்கு எதிராக நீங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய குற்றம்" எனக் குறிப்பிட்டார். 

இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த ராகுல் காந்தியின் பேச்சை ஆதரவிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நேட் பிரைஸ், "பாகிஸ்தானியர்கள், சீனர்கள் ஆகியோருக்கிடையேயான உறவைப் பற்றி பேசுவதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன். 

நான் நிச்சயமாக அந்த கருத்துக்களை ஆதரிக்க மாட்டேன். அமெரிக்கா வேண்டுமா? அல்லது சீனா வேண்டுமா? என்பதை நாடுகள் தேர்வு செய்ய வேண்டியதில்லை. இருப்பினும், அமெரிக்க கூட்டாண்மை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் வியூக ரீதியான கூட்டு நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள எந்த நாடும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் எல்லா நேரத்திலும் சுட்டிக்காட்டியுள்ளோம். அமெரிக்காவுடன் எந்த மாதிரியான உறவு இருக்க வேண்டும் என்று வரும்போது அப்போது அந்த நாடுகளுக்கு தேர்வுகளை வழங்குவது எங்கள் நோக்கம்" என்றார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →