உலகம்

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் தொடங்கியது

DIN

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. 

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 105 படகுகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். 
இந்த எதிர்பையும் மீறி தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு இன்று தொடங்கியது. அரசுடைமையாக்கப்பட்ட 105 படகுகளில் 65 படகுகளை காரைநகரில் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT