பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.
பெட்ரோபோலிஸ் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி இதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகள், கார்கள் அனைத்தும் மண்ணில் புதைந்து போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் மேயர் ரூபன்ஸ் போம்டெம்போ கூறுகையில்,
இதுவரை காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடமுடியவில்லை. தொடர்ந்து மீட்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளம் ஏற்பட்டு கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொலைந்துபோனவர்களைக் கண்டுபிடிக்க ஆங்காங்கு தோண்டி வருகின்றனர்.
புதன்கிழமை காலை, வீடுகள் பல சேற்றின் அடியில் சிக்கிய நிலையில், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கார்கள் தெருக்களில் குவிந்தன. பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இது ஒரு கடினமான நாள் என்று அவர் தெரிவித்தார்.
ரியோ டி ஜெனிரோவின் அரசு வழக்குரைஞர்கள் அலுவலகம் புதன்கிழமை இரவு ஒரு அறிக்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்படாத 35 பேரின் பட்டியலைத் தொகுத்துள்ளது என்று கூறியது.
தென்கிழக்கு பிரேசில் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்திலும் அதே மாதத்தின் பிற்பகுதியில் சாவ் பாலோ மாநிலத்திலும் கனமழை, மண்சரிவில் சிக்சி பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.