உலகம்

உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் பேச்சு

DIN


உக்ரைனில் ரஷியா போர் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜி 7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. 

ரஷியா மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு ரஷிய அதிபர் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று குறியுள்ள புதின், ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அளவில் அழிவை சந்திப்பார்கள் என்று எச்சரித்துள்ளார் புதின்.

இதையடுத்து உக்ரைனுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். 

உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. முக்கியமாக, கீவ்வில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்ற ரஷிய ராணுவம் ஈடுபட்டுள்ளன.

துல்லியமான ஆயுதங்களை கொண்டு ராணுவம் மற்றும் விமான தளங்களை ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் தாக்குதல் தொடங்கியுள்ள ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ரஷியாவின் நடவடிக்கையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன் பெரும் சேதம் ஏற்படும் என ரஷியாவுக்கு நேட்டோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT