முகப்பு
உலகம்

ரஷிய வான்வெளியில் பிரிட்டன் விமானங்கள் பறக்கத் தடை

பிரிட்டன் விமானங்கள் ரஷிய வான்வெளிப் பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 3:29 PM
பகிர்:

பிரிட்டன் விமானங்கள் ரஷிய வான்வெளிப் பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது தலைநகர் கீவ் வரை வந்துள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து உலக நாடுகள் பல கவலை தெரிவித்ததுடன் போரை நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. 

Advertisement

ஏற்கெனவே உக்ரைனுக்கு எதிரான நடவடிக்கையில் ரஷியா மீது அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. 

இதன் தொடர்ச்சியாக, ரஷியா மீது பிரிட்டன் நேற்று(பிப்.25) பொருளாதாரத் தடை விதித்ததுடன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் நாட்டினரை அடிபணியச் செய்ய நினைக்கும் ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், இன்று   ரஷிய விமான நிலையங்கள், வான்வெளிப் பகுதிகளில் பிரிட்டன் விமானங்கள்  பறக்க ரஷியா தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.