'ரஷியப் படைகள் முகாமுக்குத் திரும்ப வேண்டும்' - ஐ.நா. பொதுச் செயலாளர் கோரிக்கை
உக்ரைன் மீதான தாக்குதலை விடுத்து ரஷியப் படைகள் முகாமுக்குத் திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை விடுத்து ரஷியப் படைகள் முகாமுக்குத் திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இரு நாள்களாக நடைபெற்ற தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை விடுத்து ரஷியப் படைகள் முகாமுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அமைதிக்கான ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.