முகப்பு
உலகம்

உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்க களமிறங்கும் ஸ்பைஸ்ஜெட்!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானத்துடன் ஸ்பைஸ்ஜெட் விமானமும் களமிறங்கியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
கோப்புப் படம்
பகிர்:

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானத்துடன் ஸ்பைஸ்ஜெட் விமானமும் களமிறங்கியுள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 5-வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றியுள்ளன. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

இதனிடையே உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனிலிருந்து 5 ஏா் இந்தியா விமானங்கள் மூலமாக இதுவரை 1,156 இந்தியா்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் போலாந்து, ரோமானியா,  ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் ஏர் இந்தியாவைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஸ்பைஸ்ஜெட் விமானமும் இணைகிறது. 

புடபெஸ்ட், ஹங்கேரி பகுதிகளில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் 'போயிங் 737 மேக்ஸ்' இயக்கப்படவுள்ளது. மேலும் கூடுதல் விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன்- ரஷியா இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா குறைத்துள்ளதாக  உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →