உலகம்

சூடானில் ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்: பிரதமர் ராஜிநாமா

DIN

சூடானில் ராணுவ புரட்சிக்கு எதிராக பொதுமக்கள் தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதிகார ஆட்சி அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜனநாயக ரீதியான ஆட்சியில் பிரதமா் அப்தல்லா ஹாம்டோக் நிர்வகித்து வந்தார். பின், ராணுவத் தளபதி அப்தெல் அல்-ஃபத்ஹா புர்ஹன்(Abdel Fattah al-Burhan) அரசிற்கு எதிராக புரட்சியைத் தொடங்கினார்.

இதனால் ராணுவத்தினர் பிரதமரை சிறைப்பிடித்தனர். பின் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமர் அப்தல்லா ஹாம்டோக் பிரதமராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டது.

தற்போது சூடானில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களால் மக்கள் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தி  வருகிறார்கள். போராட்டத்தின் போது கலவரத்தில் 2 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.

மேலும், இக்கட்டான சூழ்நிலையில் நாட்டு மக்களை காக்கத் தவறியதாக பிரதமர் அப்தல்லா பதவியை ராஜிநாமா செய்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT