கோப்புப்படம் 
உலகம்

துபை லாட்டரியில் ரூ.50 கோடி வென்ற கேரள ஓட்டுநர்

புத்தாண்டையொட்டி துபையில் விற்பனையான லாட்டரி பரிசு சீட்டில் கேரளத்தை சேர்ந்தவருக்கு ரூ.50 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

DIN

புத்தாண்டையொட்டி துபையில் விற்பனையான லாட்டரி பரிசு சீட்டில் கேரளத்தை சேர்ந்தவருக்கு ரூ.50 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கேரளத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் துபையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் கடந்த 10 ஆண்டுகளாக துபையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி துபையில் விற்பனையான மெகா லாட்டரி பரிசு சீட்டை வாங்கிய ஹரிதாஸுக்கு முதல்பரிசாக இந்திய மதிப்பில் ரூ.50 கோடி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

232976 எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.50 கோடி அறிவிக்கப்பட்டது. ரூ.50 கோடி பரிசுத் தொகையைப் பெற்ற ஹரிதாஸ் மகிழ்ச்சியில், “இதனை நம்ப முடியவில்லை. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஹரிதாஸைத் தொடர்ந்து இரண்டாவது பரிசான ரூ.4 கோடியை அஷ்வின் அரவிந்தாக்‌ஷன் என்பவரும், மூன்றாவது பரிசு ரூ. 20 லட்சத்தை தீபக் ராமசந்த் பாட்டியா என்பவரும் வென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பம்!

SCROLL FOR NEXT