உலகம்

‘விரைவில் தடுப்பூசி செலுத்துங்கள்’: கனடா மக்களுக்கு ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள்

DIN

கனடாவில் கரோனா 5ஆம் அலை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டு மக்களுக்கு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் உச்சம் பெறத் தொடங்கியுள்ளது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கனடாவில் கரோனா 5ஆம் அலை பாதிப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கனடா எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடி குறித்து புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களால் மக்களும், சுகாதாரப் பணியாளர்களும் விரக்தியடைந்துள்ளனர். கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

கனடாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே விமானம், ரயில் மற்றும் கப்பல்களில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சி கூடங்கள், மதுபான விடுதிகள், இரவு விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிற்கு செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும்  40,696 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 78 சதவிகிதம் அதிகமாகும். மேலும் இதுவரை அந்நாட்டில் மொத்த மக்கள்தொகையில் 82 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசிகளையும், 77 சதவிகிதத்தினர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில்!

இந்தோனேசியாவில் ஷ்ரத்தா தாஸ்!

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

SCROLL FOR NEXT