முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து:  1,200 ரோஹிங்கியா அகதிகளின் குடிசைகள் நாசம்

வங்கதேசத்தில் காடா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா மக்களின் 16வது அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1,200 குடிசைகள் நாசமாகின.

Updated On : 10 ஜனவரி, 2022 at 2:30 PM
வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து:  1,200 ரோஹிங்கியா அகதிகளின் குடிசைகள் நாசம் (கோப்புப் படம்)
பகிர்:


டாக்கா: வங்கதேசத்தில் காடா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா மக்களின் 16வது அகதிகள் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1,200 குடிசைகள் நாசமாகின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழப்பு குறித்தும் தகவல்கள் எதுவும் இல்லை.

ஞாயிறன்று மாலை 4.55 மணியளவில், இப்பகுதியில் தீப்பிடித்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. அங்கிருந்த அனைத்தும் குடிசை வீடுகள் என்பதால், தீ மளமளவென பரவி, சுமார் 1,200 குடிசைகள் தீக்கிரையாகின என்று காவல்துறையினர் கூறினர். சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

Advertisement

ரோஹிங்கியா அகதிகளின் முகாமில் தீ விபத்து நேரிடுவது இது ஒன்றும் புதிதல்ல என்றும், அவ்வப்போது நிகழ்ந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.