உலகம்

ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு:  உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். 

DIN


ஜெனீவா:  ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். 

ஜெனீவாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் தீவிரம் குறைந்த தொற்றாக இருந்தாலும், உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிப்படுதல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து இருந்து வருவதால் இதனை லேசான தொற்று பரவலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. குறைந்த அளவிலான பாதிப்புகள் கூட சுகாதார வசதிகளை மூழ்கடித்துவிடுகின்றன. 

மேலும் அடுத்த சில வாரங்கள் சுகாதார அமைப்புகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவுக்கு தொற்றின் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

கரோனா தொற்றின் ஒவ்வொரு மாறுபாடும் ஆபத்தானதுதான். கரோனா தொற்று அச்சுறுத்தல் தற்போதைக்கு முடிவுக்கு வராது. ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடாதவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட நாடுகளைப் பற்றி நான் கவலைப்படுகிறேன், தடுப்பூசி போடாதவர்கள் கடுமையான நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் என்று டெட்ரோஸ் அதானோம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

SCROLL FOR NEXT