உலகம்

கனடா எல்லையில் பனியில் உறைந்து ஒரே குடும்பத்தில் நால்வர் பலி; இந்தியர்கள் என சந்தேகம்

DIN


டோரன்டோ: அமெரிக்க - கனடா எல்லைப் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்பட நான்கு பேர் கடும் பனி காரணமாக உறைந்து பலியாகியுள்ளனர்.

கனடா எல்லைக்குள் உறைந்த நிலையில் பலியாகியிருக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் மனிதர்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க எல்லைக்கு அதுகே, கனடா நாட்டின் எல்லைக்குள், இரண்டு பெரியவர்கள், ஒரு சிறார் மற்றும் ஒரு கைக்குழந்தையின் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கனடா நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றிருக்கலாம் என்றும், மோசமான வானிலை காரணமாக இவர்கள் பலியாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT