உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 34.70 கோடி; பலி 5.60 லட்சத்தை கடந்தது

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34.70 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.60 லட்சத்தை கடந்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 34,70,63,020-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 56,03,636 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 27,66,68,904 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 6,47,90,480 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 95,931 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,13,94,579 ஆகவும், பலி எண்ணிக்கை 8,87,643 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 38,903,731-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,88,911 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 23,757,741 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,22,647 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,57,09,059 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,53,490 ஆக உள்ளது.

பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,60,01,498 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 1,28,347 ஆக உள்ளது.

ரஷ்யாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,09,87,774 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 3,24,752 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்நாட்டில் உச்சம் தொட்ட பயணிகள் வாகன விற்பனை

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஜாபா் சாதிக் சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

கீழப்பாவூரில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: மே 28இல் தொடக்கம்

SCROLL FOR NEXT