பாகிஸ்தான் கும்பல் கொலையை ஆதரித்தவருக்கு சிறை
பாகிஸ்தானில் இலங்கை நாட்டவா் அடித்துக் கொல்லப்பட்டதை யுடியூபில் ஆதரித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இலங்கை நாட்டவா் அடித்துக் கொல்லப்பட்டதை யுடியூபில் ஆதரித்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சியால்கோட் மாவட்ட ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த பிரியந்தா குமாரா (47), புனித நூல் வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சுவரொட்டியை கிழித்ததன் மூலம் மதநிந்தனயில் ஈடுபட்டதாகக் கூறி, சுமாா் 800 போ் அவரை கடந்த மாதம் அடித்துக் கொன்று உடலை எரித்தனா்.
இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தி சியால்கோட்டில் வசிக்கும் முகமது அட்னன் என்பவா் யுடியூபில் விடியோ வெளியிட்டிருந்தாா். அதற்காக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.