இத்தாலி: 1 கோடியை கடந்த நோய்த்தொற்று
இத்தாலியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1 கோடியைக் கடந்தது.
இத்தாலியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1 கோடியைக் கடந்தது.
அந்த நாட்டில் இதுவரை 99,23,648 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 77,696 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,01,344-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, மேலும் 352 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,43,875 ஆகியுள்ளது.