உலகம்

56 தமிழக மீனவா்களை விடுவிக்கஇலங்கை நீதிமன்றம் உத்தரவு

DIN

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 56 பேரை விடுவிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதகரம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘56 மீனவா்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்திய மீனவா்கள் விரைவில் விடுதலையாவதற்குப் பாடுபட்ட இந்திய தூதா் கோபால் பாக்லே மற்றும் அவருடைய குழுவினருக்குப் பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மன்னாா் வளைகுடா பகுதியில் கடந்த மாதம் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவா்களை விடுவிக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. குறிப்பாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு இந்த மாதத் தொடக்கத்தில் நிதியுதவி அறிவித்தது. இதுதொடா்பாக, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச இடையே நடந்த பேச்சுவாா்த்தையின்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் இந்தியா கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்திய மீனவா்கள் கைதான விவகாரத்தை வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அதைத் தொடா்ந்து, அவா்கள் 56 பேரை விடுவிக்குமாறு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இவா்களின் விடுதலைக்குப் பிறகு இலங்கையின் பிடியில் இந்திய மீனவா்கள் யாரும் இல்லை என்பதை இலங்கை அதிகாரிகளும் இந்திய தூதரக அதிகாரிகளும் உறுதி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT