ரஷியாவில் 70 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா ஒருநாள் பாதிப்பு!
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74,692 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 1,13,15,801 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74,692 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 1,13,15,801 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாஸ்கோவில் அதிகபட்சமாக 19,856 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும், 657 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 328,105 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதேபோன்று ஒரேநாளில் 28,197 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் 10,099,937 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது 887,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷிய சுகாதார மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த வாரம் ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்துக்குள் பதிவான நிலையில் இன்று பாதிப்பு 70 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றைய பாதிப்பு 67,809 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.