முகப்பு
உலகம்

பிரேசில்: கடந்த 24 மணி நேரத்தில் 2,28,954 பேருக்கு தொற்று

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,28,954 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Updated On : 28 ஜனவரி, 2022 at 11:20 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:45 PM


பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,28,954 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36.69 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.65 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,28,954 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,47,82,922 ஆக அதிகரித்துள்ளது. இதே கால அளவில் 672 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,25,000 ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,20,98,157 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவர்களின் எண்ணிக்கை 20,59,596 ஆக உள்ளது. அவர்களில் 8,318 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

பிற நாடுகளைப் போலவே, பிரேசிலும் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக கரோனா நோய்த்தொற்றின் புதிய அலையை எதிர்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.