முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒருநாள் கரோனா பாதிப்பு 8,183 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,183 பேர் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,183 பேர் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் தரவுகளின் படி, 

புதிதாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து நாட்டில் மொத்தம் 1,40,2,070 பேர் இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 30 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 29,192 ஆக உயர்ந்துள்ளது. 

குறைந்தது 1,27,4,657 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர், ஆனால் சுமார் 1,353 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்துதல், தொற்று மோசாகப் பாதிக்கப்பட்ட நகரத்தில் ஊரடங்கு விதித்தல் ஆகியவற்றைப் பின்பற்றி தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதுவரை 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2.2 2 மில்லியன் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். அதேபோல், 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →