முகப்பு
உலகம்

பிரேசில்: கடந்த 24 மணி நேரத்தில் 1,34,175 பேருக்குத் தொற்று, 330 பேர் பலி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,34,175 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
பகிர்:

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,34,175 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மேலும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,34,175 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,53,48,797 ஆக அதிகரித்துள்ளது. இதே கால அளவில் 330 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து தொற்று பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,26,854 ஆக உள்ளது. 

பிற நாடுகளைப் போலவே, பிரேசிலும் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக கரோனா நோய்த்தொற்றின் புதிய அலையை எதிர்கொண்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.