ஷிண்சோ அபே உடல்நிலை கவலைக்கிடம்: ஜப்பான் பிரதமர்  
உலகம்

ஷின்சோ அபே உடல்நிலை கவலைக்கிடம்: ஜப்பான் பிரதமர் 

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய  ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ANI


டோக்யோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய  ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தொலைக்காட்சி வாயிலாக பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்த சம்பவம் மன்னிக்கக் கூடிய செயல் அல்ல என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை ஜப்பான் முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது  கண்டனத்தையும், ஷின்சோ அபே விரைவில் குணமடைய வேண்டும் என்ற வேண்டுதலையும் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், ஜப்பானின் முன்னாள் பிரதமரும், நெருங்கிய நண்பருமான ஷின்சோ அபே மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும், கடும் அதிர்ச்சிக்குள்ளானதாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், எனது நினைவுகள் அவரது குடும்பத்தார் மற்றும் நாட்டு மக்களைப் பற்றியே இருப்பதாகவும் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க செயலாளர் அந்தோனி பிலிங்கென் கூறுகையில், மிகவும் துயருற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

SCROLL FOR NEXT