உலகம்

போர்த்துகலில் முதன்முதலாக பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு

ANI

போர்த்துகலில் முதன்முதலாக பெண் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர்த்துகீசிய சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ஐரோப்பிய நாட்டில் 473 பேருக்கு குரங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் சமீபத்தில் கண்டறியப்பட்ட வழக்குகள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆண்கள் ஆவர்.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, பெரும்பாலான வழக்குகள் லிஸ்பன் மற்றும் டேகஸ் பள்ளத்தாக்கு பகுதியில் பதிவாகியுள்ளன.

பொதுவாக விலங்குகளுடன் நெருங்கிய தொடா்பு கொள்ளும்போது இந்தக் குரங்கு அம்மைத் தொற்று பரவுகிறது. எலிகள், அணில்கள் போன்ற கொறித்து உண்ணும் விலங்குகளிடமிருந்து பரவுவதாக நம்பப்படுகிறது.

மனிதா்களுக்கு மனிதர்கள் பரவுவது என்பது எச்சில், சளி மூலமாக இருக்கலாம். உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள், வைரஸ் கலந்த பொருள்கள் மூலம் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் பரவலாம். 

காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வீக்கம், முதுகுவலி உள்ளிட்டவை குரங்கு அம்மையின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT