முகப்பு
உலகம்

தைவான்: 40 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

தைவானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
taiwan065120
பகிர்:

தைவானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தைவானில் 58,599 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 40,54,189-ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 94 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 7,553-ஆக அதிகரித்துள்ளது.

அந்த நாட்டில் இதுவரை 32,87,604 போ் கரோனாவிலிருந்து முழுயைாக குணமடைந்துள்ளனா்; 7,59,032 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.