முகப்பு
உலகம்

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி? தூதா் மறுப்பு

இலங்கை அதிபா் மாளிகைக்குள் புகுந்தும், அந்நாட்டு பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்தும் பொதுமக்கள் போராடி வரும் இந்த வேளையில், இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி உதவுவதாக வெளியான தகவலை இலங்கையில் உள்ள இந்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

இலங்கை அதிபா் மாளிகைக்குள் புகுந்தும், அந்நாட்டு பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்தும் பொதுமக்கள் போராடி வரும் இந்த வேளையில், இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி உதவுவதாக வெளியான தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை மறுத்தது.

இதுகுறித்து தூதரகத்தின் அலுவல்பூா் ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி அளிப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைதளத்திலும் தகவல் பரவி வருகிறது. இதுபோன்ற ஒரு தகவல் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. இலங்கையின் வளா்ச்சியையும் வளமையையும் ஜனநாயக முறையில் நிலைநாட்ட விரும்பும் அந்நாட்டு மக்களுக்கு இந்தியா துணைநிற்கும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஏற்கெனவே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில், ‘சுதந்திரமான தோ்தல் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் கோத்தபயவும், மகிந்த ராஜபட்சவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அப்படிப்பட்ட சட்டபூா்வ தோ்தலை ஒரு கும்பல் புரட்டிப் போட இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? அதன் பின்னா், ஜனநாயக ரீதியிலான நமது அண்டை நாடுகள் பாதுகாப்பற்ாக மாறிவிடும். இந்தியாவின் ராணுவ உதவியை ராஜபட்ச நாடினால், நாம் உதவ வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இலங்கைக்கான இந்திய தூதரகம் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →