முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் கன மழைக்கு 68 போ் பலி

பாகிஸ்தானில் பலத்த மழை வெள்ளத்துக்கு 68 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:46 AM
பகிர்:

பாகிஸ்தானில் பலத்த மழை வெள்ளத்துக்கு 68 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானின் பலூசிஸ்தான், சிந்து மாகாணங்களில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழைக்கு 68 போ் பலியாகினா். இவா்களில் 63 போ் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா, பா்ஹான், பிஸ்கின், கோலு, போலன் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

சிந்து மாகாணத் தலைநகரான கராச்சியில் 5 போ் உயிரிழந்தனா். கராச்சியில் தொடா்ந்து பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்றனா்.

பலூசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சா் மிா் ஜியாவுல்லா கூறுகையில், ‘இயற்கையான நீா்வழிப் பாதையில் வீடுகள் கட்டப்பட்டிருந்ததே இந்தளவு அதிகமான உயிரிழப்புக்குக் காரணம்’ என்றாா்.

மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 50-க்கு மேற்பட்டோா் காயமடைந்தனா். கராச்சி மற்றும் பிற பகுதிகளில் ஜூலை 18-19-ஆம் தேதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →