உலகம்

இலங்கை: பிரதமர் இல்லத்தில் போராட்டக்காரர்களிடையே மோதல்

இலங்கை பிரதமர் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இலங்கை பிரதமர் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் ஏராளமான பொதுமக்கள் பிரதமர் இல்லம் அமைந்துள்ள அலரி மாளிகையில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருவதால் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனால் அதிபர் கோத்தபர ராஜபட்ச பதவி விலகினார்.

போராட்டக்காரர்கள் பிரதமர் மற்றும் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிரதமர் இல்லத்தின் அனைத்து அறைகளில் உள்ள உடமைகளையும் சேதப்படுத்தி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

பிரதமர் இல்லத்தில் பாரம்பரியம்மிக்க பல பொருள்களை போராட்டக்கார்கள் சேதப்படுத்தியுள்ளதாக கொலம்பியா போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பல புராதானப் பொருள்கள் சேதமடைந்ததுடன், அதிக விலைமதிப்புடைய பொருள்கள் காணவில்லை எனவும் பிரதமர் அலுவகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் இல்லத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT