உலகம்

ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார் கோத்தபய!

DIN


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமாவுக்கு முன்னதாக ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக உறுதியளித்த கோத்தபய ராஜபட்ச, அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு  முன்னதாகவே இலங்கை ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து பிபிசி தெரிவித்துள்ளதாவது: 

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடி காணமாக ஏற்பட்டுள்ள பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில், இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபட்ச, விமானப்படையின் ஜெட் ஏஎன் 32 விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

73 வயதான கோத்தபய மாலத்தீவு தலைநகரான மாலேவுக்கு உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு வந்தடைந்தார். 

இலங்கை ராணுவ விமானம் ஒன்றில் இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதன் மூலம் அவர் இலங்கையை ஒரு தசாப்த காலத்திற்கு மேல் ஆண்ட ராஜபட்ச குடும்ப வம்சாவழியின் வரலாற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது. 

கோத்தபய நாட்டை விட்டு வெளியேறியுள்ளது நாட்டில் அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோத்தபட ராஜபட்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை கடந்த சனிக்கிழமை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து அவர் தலைமறைவாக இருந்தார். அவரது சகோதரர் பசில் ராஜபட்சவும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT