உலகம்

'கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யவில்லை எனில்...' - அவைத் தலைவர் எச்சரிக்கை!

கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை எனில், அவரை பதவியிலிருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்கும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்தார். 

DIN

கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை எனில், அவரை பதவியிலிருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்கும் நிலை ஏற்படும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவா்த்தனே தெரிவித்தார். 

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையை கடந்த 9-ஆம் தேதி ஆயிரக்கணக்கான  மக்கள் முற்றுகையிட்ட நிலையில் கோத்தபய ராஜபட்ச தப்பியோடினார். தற்போது மாலத்தீவில் இருக்கும் அவர், சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே, ஜூலை 13-இல் (புதன்கிழமை) அதிபா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கோத்தபய ராஜபட்ச, நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்த்தனேவை தொடா்புகொண்டு கூறியிருந்தார். ஆனால், அவரது ராஜிநாமா கடிதம் இன்னும் வந்து சேரவில்லை என்ற அவைத் தலைவர் அபேவா்த்தனே கூறியிருந்தார். 

இதையடுத்து இன்று அபேவா்த்தனே கூறுகையில், கோத்தபய ராஜபட்ச தனது ராஜிநாமா கடிதத்தை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை எனில், அவரை பதவியில் இருந்து நீக்க வேறு வழிகளை பரிசீலிக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் மக்கள் போராட்டம் வலுவடைந்ததையடுத்து, நாடு முழுவதும் அவசரநிலை புதன்கிழமை பிரகடனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT