உலகம்

இலங்கையின் நிலைக்கு ரஷியாதான் காரணம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

DIN

இலங்கையின் தற்போதைய நிலைக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு 5 மாதங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் இரு நாடுகள் போரிட்டு வருகின்றன. 

இந்நிலையில், தென் கொரியாவின் சியோலில் ஆசிய தலைமைத்துவ மாநாட்டின்போது உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஜெலென்ஸ்கி, ரஷியப் படையெடுப்பு குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்னை குறித்தும் பேசினார். 

அப்போது, 'உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் பணவீக்கத்தை ரஷியா உருவாக்கி வருகிறது. கருங்கடல் பகுதியினை ரஷியா முற்றுகையிட்டுள்ளதால் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. 

அந்தவகையில், இலங்கையின் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம். உணவு மற்றும் எரிபொருள்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுதான் ஒரு சமூகப் புரட்சிக்கு காரணமானது. இது எப்படி முடிவடையும் என்று இப்போது யாருக்கும் தெரியாது' என்று கூறினார். 

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் உலகச் சந்தைக்கான 2 கோடி டன் தானியங்கள் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஐம்பது சதவீதத்திற்கும் மேலான ஏற்றுமதி அதன் முக்கிய கருங்கடல் துறைமுகமான ஒடேசா வழியாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT