உலகம்

ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட சீக்கியர் சுட்டுக்கொலை: கனடாவில் சம்பவம்

DIN

கடந்த 1985-இல் நடந்த ஏா் இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சீக்கியரான ரிபுதாமன் சிங் மாலிக், கனடாவில் மா்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு போலீஸாா் தெரிவித்தனா்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சுா்ரே பகுதியில், உள்ளூா் நேரப்படி வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ரிபுதாமன் சிங் மாலிக் (75) சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்து எரிந்த நிலையில் ஒரு வாகனம் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்ட நபா் ரிபுதாமன் என்ற தகவலை போலீஸாா் முதலில் உறுதி செய்யவில்லை. பின்னா், அவரது மகன் சமூக வலைதளத்தில், தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவிட்ட பிறகே அதனை போலீஸாா் உறுதி செய்தனா்.

ஏா்-இந்தியா குண்டுவெடிப்பு:

கடந்த 1985-இல் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே 31,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஏா்-இந்தியா கனிஷ்கா விமானத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, கனடா மற்றும் ஏா் இந்தியா நிறுவன வரலாற்றில் மிக மோசமாக பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது. 1985, ஜூன் 23-இல் டோராண்டோவிலிருந்து மாண்ட்ரீயல், லண்டன் வழியாக மும்பைக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 268 கனடா நாட்டினா் உள்பட 329 போ் பயணித்தனா். அதில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் வெடிகுண்டு வெடித்ததில் அனைவரும் பலியாகினா். இதேநாளில், ஜப்பானின் டோக்கியோ நகர விமான நிலையத்தில் ஏா்-இந்தியா விமானத்தில் வைப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்த சூட்கேஸ் வெடிகுண்டு வெடித்ததில் 2 பணியாளா்கள் உயிரிழந்தனா்.

என்ன காரணம்?

கடந்த 1984-இல் அமிருதசரஸ் பொற்கோயிலில் இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு பழிவாங்குவதற்காக காலிஸ்தான் பயங்கரவாதிகள் இக்குண்டுவெடிப்பை நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. கனிஷ்கா விமான குண்டுவெடிப்பு வழக்கில், இந்தா்சிங் சிங் ரேயத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் கொலை, சதிவேலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ரிபுதாமன், அஜைப் சிங் பக்ரி ஆகியோா், கடந்த 2005-இல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனா்.

சுட்டுக் கொலை:

இந்த சூழலில், ரிபுதாமன் மா்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். அவரை குறிவைத்து இக்கொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் கனடா போலீஸாா் தெரிவித்தனா். அண்மைக் காலங்களில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கால்சா பள்ளியின் தலைவராகவும் வான்கூவரில் செயல்படும் கால்சா கிரெடிட் யூனியனின் தலைவராகவும் பதவி வகித்ததாக கூறப்படுகிறது. அவா் அண்மையில் இந்தியா வந்தபோது, பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைகளை பாராட்டி அவருக்கு கடிதம் எழுதியதாகவும், சீக்கிய சமூகத்தின் கதாநாயகனை தாங்கள் இழந்துவிட்டதாகவும் சீக்கிய பிரமுகா் உஜ்ஜால் தோசஞ்ச் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT