உலகம்

மலேசியா: ரூ.150 கோடி யானை தந்தங்கள் பறிமுதல்

மலேசியாவில் ரூ.150 கோடி மதிப்பிலான விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

DIN

மலேசியாவில் ரூ.150 கோடி மதிப்பிலான விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடான மலேசியாவில் விலங்குகளின் பாகங்கள் விற்பனை செய்யப்படுவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதன் காரணமாக, பணத்திற்காக யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும் எரும்புத் திண்ணிகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஜூலை 10 ஆம் தேதி மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள போர்ட் கிளாங்கில், மரக்கட்டைகளுடன் ஒரு கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சரக்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றில் ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட விலங்குகளின் பாகங்களும் அடங்கியிருந்தன.

பின்னர், அதிலிருந்த ரூ.144 கோடி மதிப்பிலான 6,000 கிலோ எடைகொண்ட யானை தந்தங்கள், 29 கிலோ காண்டாமிருகக் கொம்புகள், 100 கிலோ எறும்புத் திண்ணி செதில்கள் மற்றும் 300 கிலோ எடையுள்ள விலங்குகளின் மண்டை ஓடுகள் மற்றும் பிற எலும்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், மலேசிய வரலாற்றில் யானை தந்தக் கடத்தலில் இதுவே அதிக எடைகொண்ட கடத்தல் முயற்சி எனவும் சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT