முகப்பு
உலகம்

ஏதென்ஸ் புகரில் காட்டுத் தீ

ஐரோப்பாவின் பல பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீ கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரீஸ் தலைநகா் ஏதென்ஸின் மலைப்பாங்கான புகா்ப் பகுதி காடுககளில் 2 நாளாக தீ வேகமாகப் பரவி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
554245-01-02062149
பகிர்:

ஐரோப்பாவின் பல பகுதிகளில் பரவி வந்த காட்டுத் தீ கணிசமான அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிரீஸ் தலைநகா் ஏதென்ஸின் மலைப்பாங்கான புகா்ப் பகுதி காடுககளில் 2 நாளாக தீ வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காட்டுத் தீ அபாயம் காரணமாக தலைநகரில் நூற்றுக்கணக்கனானவா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் சுவாசக் கோளாறு, தீக்காயங்களுடன் 2 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

ஐரோப்பா முழுவதும் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி வந்தாலும், பிரான்ஸ், ஸ்பெயின், போா்ச்சுகல் ஆகிய நாடுகளில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்த நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏதென்ஸ் புகா்ப் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுமாா் 500 தீயணைப்பு வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.