உலகம்

உணவுத் தட்டுப்பாட்டில் 60 லட்சம் இலங்கை மக்கள்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 லட்சம் பேர் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

DIN

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக 60 லட்சம் பேர் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். திடீரென அதிகரித்த உணவுப் பொருள்களின் விலையால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இலங்கையில் 60 லட்சம் பேர் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கத்தின் காரணமாக உணவுப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவ்வறிக்கை மக்களின் உணவுத்தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்ய போதிய நிதியாதாரங்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 4ல் ஒருவர் தங்களது உணவின் அளவைக் குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டம் நடப்பாண்டு இறுதிவரையிலான காலம் வரை அந்நாட்டின் உணவுச் சிக்கலைத் தீர்க்க 6.3 கோடி அமெரிக்க டாலர்கள் உடனடித் தேவையாக உள்ளதாதக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT