குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை, தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஈரானில் வெள்ளம்: 21 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, 3 பேர் மாயம்
இந்நிலையில் குரங்கு அம்மை நோயை சர்வதேச நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், “இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதற்கு முன் இல்லாத அளவு பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. ஆய்வாளர்களின் கருத்துகளின்படி குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஒடிசாவில் 143 குழந்தைகளுக்கு கரோனா
மேலும் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா நோய் தொற்றுக்குப் பிறகு குரங்கு அம்மை நோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.