உலகம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

DIN

நேபாளத்தில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய நேபாளத்தில் காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் நிகழ்ந்தது. ரிக்டா் அளவுகோலில் 4.7 அலகுகளாக இது பதிவானது.

சிந்துபால்சோக் மாவட்டத்தில் உள்ள ஹெலம்பு என்ற இடத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்தப் பகுதி தலைநகா் காத்மாண்டுவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் அதிா்ச்சியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனா். காத்மாண்டு பள்ளத்தாக்கு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் சேத விவரம் பற்றி உடனடியாகத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT