உலகம்

காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: 4 பேர் காயம்

DIN

ஆப்கனில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஷ்பகேஸா டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பேண்ட் இ அமிர் டிராகன்ஸ், பாமிர் சால்மி அணிகள் விளையாடிக்கொண்டிருந்தன.

அப்போது மைததானத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதனால் வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் அச்சமடைந்தனர். உடனடியாக மைதானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், இச்சம்பவத்தில் ரசிகர்கள் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே வீரர்கள், போட்டி அமைப்பாளர்கள் நலமுடன் இருப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.  தாக்குதல் நடந்தபோது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மைதானத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT