பிரிட்டனின் வெப்பநிலையில் ஆதிக்கம் செலுத்தும் காலநிலை மாற்றம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள் 
உலகம்

பிரிட்டனின் வெப்பநிலையில் ஆதிக்கம் செலுத்தும் காலநிலை மாற்றம்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக 10 மடங்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

DIN

பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக 10 மடங்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20-ஆம் தேதி வெப்ப அலை உச்சத்தைத் தொட்டபோது, பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. பசுமை இல்ல வாயுக்கள் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வெப்ப அலைகளின் போது பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக 10 மடங்கு அதிகமாக வெப்பநிலை பதிவானதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவின் வெப்பநிலையில் மிக வேகமாக மாற்றம் நிகழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் 40.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலநிலை தரவுகள் மற்றும் கணினி மதிப்பீடுகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட கடந்த சில ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் கணிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் பிரிட்டனின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி டிரெய்லர்!

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அழகின் பிரதிபலிப்பு... ஷில்பா ஷெட்டி!

அழகு பூந்தோட்டம்... தேஜஸ்வினி சர்மா!

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

SCROLL FOR NEXT