முகப்பு
உலகம்

'இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவும்' - பிரதமர் மோடி உறுதி

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவும் என அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
கோப்புப்படம்
பகிர்:

இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவும் என அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என பிரச்னைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. அண்டை நாடான இந்தியா, இலங்கைக்கு உதவி வருகிறது. 

இந்நிலையில் இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு அந்நாட்டு வேளாண் அமைச்சா் மகிந்த அமரவீர, இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இலங்கைக்கான இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் ரசாயன உரம் பெறுவதில் இலங்கை ஆா்வம் தெரித்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

அதுபோல அதிபர் கோத்தபய ராஜபட்சவும் இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார். 

இதையடுத்து இலங்கையில் நெல் சாகுபடி செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் இலங்கைக்கு உரம் விநியோகிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். 

முன்னதாக, கடந்த புதன்கிழமை, இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியா உரம் விநியோகம் செய்யும் என்று கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →