உலகம்

விண்வெளி நிலையத்தை அடைந்தனா் சீன வீரா்கள்

DIN

சீனா சொந்தமாக அமைத்து வரும் விண்வெளி ஆய்வு நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பட்டுள்ள 3 விண்வெளி வீரா்கள், அந்த நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தியாங்காங் விண்வெளி நிலைய கட்டமைப்பின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய விண்வெளி வீரா்கள் சென்ற சென்ஷோ-14 விண்கலம் அந்த ஆய்வு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக இணைந்ததாகத் தெரிவித்தனா். அந்த மூவரும் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக அவா்கள் கூறினா்.

விண்வெளியில் 6 மாதங்கள் தங்கியிருந்து தியாங்காங் ஆய்வு நிலையத்தை அந்த மூவரும் நிறைவு செய்யவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT