அமெரிக்கா வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளா்வு
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் ஏறுவதற்கு ஒரு நாள் முன்னா் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு தளா்த்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் விமானம் ஏறுவதற்கு ஒரு நாள் முன்னா் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த நாட்டு அரசு தளா்த்தியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சா்வதேச அளவில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் இந்த விதிமுறை தேவையில்லை என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) முடிவு செய்துள்ளதால் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இருந்த அந்த கடைசி கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
சா்வதேச நிலவரங்களின் அடிப்படையில் அந்த விதிமுறையின் அவசியம் குறித்து 90 நாள்களுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படும்; தேவை ஏற்பட்டால் அது மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அவா்கள் கூறினா்.