உலகம்

இந்திய கோதுமை ஏற்றுமதிக்குஐக்கிய அரபு அமீரகம் 4 மாதம் தடை

DIN

இந்திய கோதுமை, மாவு ஆகியவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய அந்நாடு நான்கு மாதங்களுக்கு தடை விதித்துள்ளது.

உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா மே 14-ஆம் தேதி முதல் தடை விதித்தது.

எனினும், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பொருளாதார நல்லுறவு வா்த்தக ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தேவையான கோதுமை மட்டும் அனுப்பி வைக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.

அந்நாட்டுக்கு அனுப்பப்படும் கோதுமை, மாவு உள்ளிட்ட பொருள்களை அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் தற்போது நான்கு மாதத் தடையை விதித்துள்ளது.

இதுதொடா்பாக ஐக்கிய அரபு அமீரக பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய கோதுமை, கோதுமை மாவு, கோதுமை பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. மே 13-ஆம் தேதிக்கு முன்பு ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்திய கோதுமைப் பொருள்கள் குறித்த விவரங்களை அந்தந்த நிறுவனங்கள் அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், இந்திய கோதுமை அல்லாத உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கான விவரங்களை சமா்ப்பித்தும் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. எனினும் அதற்கு முன்பு ஏற்றுமதிக்கு அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, 469,202 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT