Image Credit: Reddit 
உலகம்

104 ஆண்டுகளில் தடயமின்றி அழிந்த ஆர்க்டிக் பனிப்பாறைகள்

காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பிரதேசம் உருமாறியுள்ளதை விளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பிரதேசம் உருமாறியுள்ளதை விளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காலநிலை மாற்ற பாதிப்பு முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது தீவிரமாக உணரப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயருவதும் அதன்காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதும் அதிகரித்துவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் 104 ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகளை எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
1918ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வடக்கு நார்வேயின் ஸ்வால்பார்ட்டில் உள்ள பனிப்பாறைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து புகைப்படக் கலைஞர் நெய்ல் ட்ரேக் அதே இடத்தில் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டுள்ளார். மேலும் அவர் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதற்கான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ட்ரேக் பகிர்ந்துள்ள இந்தப் படத்தில் 104 வருடங்களுக்கு முன்பிருந்த பனிப்பாறையானது உருகி தற்போது அதன் பின் உள்ள மலைகள் தெரிவது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.2

ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு 13 சதவிகித பனிப்பாறைகளை காலநிலை மாற்றத்தால் இழந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT