உலகம்

ஆப்கன் நிலநடுக்கம்: 1,000 பேர் பலி, 1,500 பேர் காயம்

DIN

ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

பத்திகா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்துள்ளன. இதில் இதுவரை 1,000 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பத்திகா மாகாணத்தில்  பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர்க மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். 

மேலும், பேரழிவைத் தடுக்க உடனடியாக குழுக்களை அனுப்புமாறு அனைத்து உதவி நிறுவனங்களையும் மாகாண அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT