முகப்பு
உலகம்

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் செவ்வாய்க்கிழமை பேசினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் செவ்வாய்க்கிழமை பேசினார்.

ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து கடந்த 6 நாள்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்தன. இதில், இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவர் பலியானார். மேலும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பேசியதாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில் சார்லஸ் கூறியதாவது:

மக்களுக்கு எதிராக ரஷ்ய கண்மூடித்தனமான தாக்குதல்களால் இன்று கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →