முகப்பு
உலகம்

நெருக்கடி தரும் மேற்குலக நாடுகள்...செளதி அரேபியாவுக்கு புதின் சொல்லும் செய்தி என்ன?

கச்சா எண்ணெயின் உற்பத்தியை அதிகரித்து விலையை குறைப்பதில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு அழுத்தத்தை சந்தித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைன் மீது போர் தொடுதுள்ள ரஷியா மீது பல்வேறு மேற்குலக நாடுகள் தடைகளை விதித்துள்ளன. இதற்கு மத்தியில், முக்கியத்துவம் வாய்ந்த புவி அரசியலின் மூலம் நட்பு நாடுகளை வளைக்கும் வகையில் ரஷியா முயற்சி எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, செளதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் ரஷிய அதிபர் புதின் இன்று தொலைபேசியில் பேசியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாதார ரீதியாக ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பிடமிருந்து ரஷிய வங்கிகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயை வாங்க வர்த்தகர்கள் தயக்கம் காட்டிவருகின்றனர்.

இருப்பினும், செளதி அரேபியா மற்றும் ரஷியா தலைமை வகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு, இந்த நெருக்கடியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், கச்சா எண்ணெயின் உற்பத்தியை அதிகரித்து விலையை குறைப்பதில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு அழுத்தத்தை சந்தித்துள்ளது. இது, ரஷிய மற்றும் செளதி நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதின், முகமது பின் சல்மான் ஆகியோர் தொலைபேசியில் பேசியிருப்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஷியா, "உலகளாவிய எரிசக்தி விநியோக பிரச்னைகளை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புடின் வலியுறுத்தினார். ரஷிய, செளதி கூட்டணி வளர்ச்சியில் பரஸ்பர ஆர்வத்தை இந்த உரையாடல் வலியுறுத்தியது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.