முகப்பு
உலகம்

உக்ரைன் போர்: மிக்கலேவ் நகரைக் கைப்பற்றியது ரஷியா

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகரை ரஷிய ராணுவம் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
கோப்புப்படம்
பகிர்:

உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிக்கலேவ் நகரை ரஷிய ராணுவம் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 9-வது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷியப் படை, இன்று உக்ரைனில் உள்ள சபரோஸ்ஸியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதுடன் தொடர்ந்து உக்ரைனின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், கெர்சன் மற்றும் எனர்கோடர் நகரங்களைக் கைப்பற்றிய ரஷிய ராணுவம் தற்போது மிக்கலேவ் நகரையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உக்ரைனில் ரஷியாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →