முகப்பு
உலகம்

உக்ரைன் போரில் இதுவரை 351 பொதுமக்கள் பலி: ஐ.நா.

உக்ரைனில் ரஷியப் படையெடுப்புக்குப் பிறகு நடைபெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை 351 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

உக்ரைனில் ரஷியப் படையெடுப்புக்குப் பிறகு நடைபெற்று வரும் தாக்குதல்களில் இதுவரை 351 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுவரை 351 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல்களில் 707 போ் காயமடைந்தனா்.

Advertisement

முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே பலியானவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தொடா் தாக்குதல் நடைபெறுவதாலும் அங்கிருந்து வரும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாததாலும் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

14.5 லட்சம் போ் வெளியேற்றம்: போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 14.5 லட்சம் போ் அண்டைநாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 14.5 லட்சத்தை எட்டியுள்ளது. அந்த நாடுகளின் அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, போலந்தில் 7,87,300 பேரும் மால்டோவாவில் 1,44,700 பேரும் உக்ரைனிலிருந்து வந்து தஞ்சமடைந்துள்ளனா். இதுதவிர, ருமோனியாவில் 1,32,600 போ், ஸ்லோவாகியாவில் 1,00,500 போ் உக்ரைனிலிருந்து வந்துள்ளனா்.

138 நாடுகளைச் சோ்ந்தவா்கள் உக்ரைனிலிருந்து அண்டைநாடுகளுக்கு வெளியேறியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments