உலகம்

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்புகள் சேதம்: உக்ரைன்

DIN

ரஷியத் தாக்குதலில் செர்னோபில் அணு உலையில் மின்வசதி தரும் கட்டமைப்புகள் சேதமாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து 14-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருவதால்  உலகின் முக்கியமான அணு உலையான செர்னோபில் அணு உலையில் மின்வசதிகளைத் தரும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால்  அணுஎரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகளிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சு வெளியேறும் அபாயம் இருப்பதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் ’ரஷியாவின் இந்த ஆபத்தான நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, ரஷியப் படைகள் செர்னோபிலைக் கைப்பற்றியபோது அங்கிருந்து அதிகப்படியான கதிர்கள் வெளியாவதாக உக்ரைன் அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT